{"product_id":"leadership-9789387383456","title":"Leadership","description":"\u003cp\u003e • Author(s): Brian Tracy\u003cbr\u003e • Publisher: Manjul Publishing House\u003cbr\u003e • Publisher Imprint: Manjul Publishing House\u003cbr\u003e • BISAC: Leadership\u003c\/p\u003e\u003cp\u003e‘பிரையன் டிரேசி வெற்றி நூலகம்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஏழு புத்தகங்கள் மேலாளர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய சக்திவாய்ந்த கையேடுகள் என்றால் அது மிகையல்ல. வியாபாரம் தொடர்பான முக்கியமான அம்சங்கள் குறித்த நம்பகமான உள்நோக்குகளை விரைவாகவும் சுலபமாகவும் பெற விரும்புகின்ற எவரொருவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை. கைக்கு அடக்கமான இந்நூல்கள், அடிப்படை வியாபாரத் திறமைகளைக் கற்றுக் கொள்ளவும் அவற்றை மெருகேற்றவும் உதவக்கூடிய உண்மையான எடுத்துக்காட்டுகளும் நடைமுறை உத்திகளும் நிரம்பப் பெற்றுள்ளன.அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள ‘தலைமைத்துவம்’ எனும் இந்நூலில், வெற்றி’ நிபுணரான பிரையன் டிரேசி, நீங்கள் ஒரு சிறந்த தலைவராக ஆவதற்கு நீங்கள் தெரிந்து கொண்டு கடைபிடிக்க வேண்டிய பல முக்கியமான விஷயங்களையும் அவற்றை எவ்வாறு நீங்கள் செயல்படுத்துவது என்பதையும் விளக்கியிருக்கிறார்.இந்நூலில் இடம்பெற்றுள்ள சக்திவாய்ந்த 21 உத்திகளில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:• மற்றவர்களிடம் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வளர்த்தெடுப்பது எப்படி• தாங்கள் ஒரு குறிக்கோளுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை உங்கள் ஊழியர்களிடம் ஏற்படுத்துவது எப்படி• பாதகமான சூழ்நிலைகளை வாய்ப்புகளாக மாற்றிக் கொள்ளுவது எப்படி• வெற்றி பெறும் குழுக்களை உருவாக்குவது எப்படி• சாதாரணமான மக்களிடமிருந்து அசாதாரணமான விளைவுகளைப் பெறுவது எப்படி• நிறுவனத்தை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லக்கூடிய ஒருவராக எல்லோரும் உங்களைப் பார்க்கும்படியான ஒரு நபராக ஆவது எப்படி\u003c\/p\u003e","brand":"Manjul Publishing House","offers":[{"title":"Paperback","offer_id":46849119092887,"sku":"9789387383456","price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0666\/3471\/1191\/files\/9789387383456.webp?v=1769596085","url":"https:\/\/atlanticbooks.com\/products\/leadership-9789387383456","provider":"Atlantic Books","version":"1.0","type":"link"}